அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே! என்று கணினி வல்லூனர்களின் மீது அதீத பாசத்துடன் நம்மஅசுர அண்ணன் ஒரு பதிவு போட்டுருக்கா.
அய்யோ என்ன பாசம். என்ன பாசம். அதுல அவுக சொல்லிருக்காக(அவர் பதிவ இன்னும் நான் முழுசா படிக்கமுடியல)
G.B. பிரபாத் அவர்கள் எழுதின புத்தகத்த மேற்கோள்காட்டி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நம்மல ஏமாத்துறாங்களாம். நாட்டுல நிறைய பேருக்கு முக்கியமா IT மக்கள் தனிமை நோய் தாக்கிட்டு இருக்காம். பாத்து இருங்க மக்களே.
அதனால நான் என்ன கேள்விபட்டேன்னா இந்த நோய் தொற்று நோயாம். வேலையின்மை,பசி,பட்டினி,விரக்தி, கீழ்பொருளாதார நிலைமை மற்றும் பற்பல கம்யூனிச நோய்கள விட இது கொடுமையானது. இந்த நோய் வந்தா பீட்சா மட்டுதான் சாப்பிடமுடியுமாம். தண்ணியே குடிக்க முடியாதாம். வெறும் மோருக்கு பதில் பீரும், எதோ விரலுக்கு ஏத்த வீக்கம் மாதிரி ஜானிவாக்ரோ, ஸ்காட்சோ மட்டும்தான் குடிக்க முடியுமாம். அதனால் பாத்து இருங்க மக்களே.
IT மக்கள் தண்ணியடிச்சுட்டு ரோட்டுல போறவரவங்க எல்லாம் கொண்ணுகிட்டு இருக்காங்களாம்். டேய் யார்டா அது இடையில சவுண்ட் வுடுரது. என்னாது அப்ப மத்தவங்க எல்லாம் நாட்டுல தண்ணி அடிக்குறது இல்லையா?.. எவன்டா அது அதிகபிரசங்கிதானமா கேள்வி கேக்குறது. செக்குலரிசமுனா என்ன மீனிங்கு தெரியுமால உனக்கு.சிறுபிள்ளைதனமா கேட்டுக்கிட்டு. அவுக எதாவது சொன்னா எதிர் கேள்வி கேட்பியா நீ?.. உனக்கு இது தேவையா?..ம்ம்ம்... சொல்லு..உனக்கு இது தேவையா?.
IT மக்கள் எல்லாம் அமேரிக்ககாரனுக்கு அடிவருடியா இருக்காங்களாம்.
"ஹைய்யோ..ஹைய்யோ".
அவுக நமக்கு குறைஞ்ச கூலி கொடுக்குறாங்களாம். அதானால நாம் எல்லோரும் சங்கம் அமைச்சு அவர்களுக்கு எதிரா போராடனுமாம்.
என்னாது அப்ப உன்் முதலாளி மூட்டைய கட்டிகிட்டு சைனாக்கு போயிருவான..
டேய் குறுக்கால பேசாத. அவன் போனா போயிட்டு போறான். எங்க போறான் நம்ம ஒன்னு விட்ட அண்ணண் வீட்டுக்குதானே. அண்ணன் நமக்கு எவ்வளவு உதவி பண்ணிருக்கா. நமக்கு சங்கம்தான் முக்கியம்.சங்கம் சோறு போடும். சங்கம் தனிமை நோயை நம்மகிட்ட அண்ட விடாது தெரியமா...
IT மக்கள் ஷிப்ட்ல போட்டு தூங்கவிடாம கெடுக்குறாங்களாம்.
"அமெரிக்ககாரன் தான் ஷிப்ட் முறைய கண்டுபிடிச்சானா. இது வேற எங்கேயும் இல்லையா" டேய்.....
"அண்ணே உங்களுக்கு அதிகமா சம்பளம் வேணுமுனா உங்க முதாலாளி கிட்ட கேளுங்கண்ணே. உங்க ஆபிஸ்ல சங்கம் ஆரம்பிங்கோ. அதுக்கா அடுத்தவன் ஆபிஸ் டெஸ்ட் பண்ணி பாக்குறீங்களா?. உங்களுக்கு என்ன சம்பளமுனு விதிச்சிருக்கோ அதான் உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவன பாத்து பொறாமைபட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல. ஏன் உங்க எல்லோருக்கும் எங்களோட வருமானாம் மட்டுமே கண்ண உறுத்துது."
அசுர அண்ணே அமேரிக்க முதலாளித்துவம்னு, புலம்புரீங்களே. நீங்க தட்டுர கீபோர்ரும், computerயும், நெட்டும், அந்த முதலாளிதுவமும், முதாலாளியும், அவங்களுக்கு பாதவருடியாஇருந்தா வல்லுனர்கள்தான் கண்டுபிடிச்சது. அதானால நீங்க அல்லது உங்க சங்கம் மூலியமா சொந்தமா ஒன்னு கண்டுபிடிச்சு உங்க கருத்துக்களை அதுவழியா வைங்களேன்.
"அவங்க கண்டுபிடிப்பு டால்டா டின்னுல ஓட்டை போடுறதும், தட்டிபோர்டும், ரசிதுதான் சார்"
டேய் அதுவாது கண்டுபிடிசாங்களே,அதை பாராட்டுடா.சும்மா அடுத்தவங்கள குறை சொல்லாதே.
ஓ.கே சீரியஸ் பார்ட்.
அசுர அண்ணே உங்ககிட்ட(கம்யூனிட்கள் அனைவரும்) வந்து யாராவது புலம்பிலானாங்களா?. IT மக்கள் அவன் அவன் வேலை அவன் அவன் பேசாமா பாத்துகிட்டுதான் இருக்கான். நீங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணிபாத்தாச்சு. தலையால தண்ணிகுடிச்சும் பாத்தாச்சு எவனும் சங்கத்து பக்கம் தலைகூட வச்சு படுக்கமாட்டேனுரான். நீங்கதான் ஆப்பம் சுடுர ஆயாவுக்கும் பாயா ஊத்துர பேத்திக்கும் இடையிலேயே வர்க்கபேதத்த உண்டு பண்ணுவீங்க. எங்கள எல்லாம் உட்டுரூவீங்களா என்ன?. உங்க கொளுகை தலைநகர் பெங்கால்ல சங்கமும் வச்சு பாத்தாச்சு. ஒன்னும் கதைக்கே ஆகல.
அண்ணே இந்த வேர்ல்ட் எப்படினா "Survial of the fittest".
அதானால வேலை போயிடும்னு பயப்படவேண்டாம். திறமையுள்ளவன் இன்னொருவேளைய பிடிச்சு பொழைச்சுகிருவான்.
பாருங்க 2000--2003 வரைக்கும் IT field டவுனா இருந்தப்ப எல்லருக்குமா வேலை இல்லாம போச்சு. அப்பவும் வேலை நடந்துகிட்டுதான் இருந்தது.
இந்த சங்கம் யாருக்கு தேவைனா ஆபிஸ் நேரத்துலா வேளைபாக்காம சும்மா நெட்ல பிரவுஸு பண்ணிகிட்டு,பக்கம் பக்கம்மா எழுதி ஊர்கதை, உலக கதைபேசிக்கிட்டு காலைல 9 மணிக்கு வந்து சாயந்திரம் 5 மணிக்கு வீட்டுக்கு போயி வெத்து நியாயம,உரிமை் பேசுரவங்களுக்குதான்.
உண்மையா உழைக்குறவங்களுக்கு அதுலாம் தேவையே இல்ல. முதலாளி கெட்டவானா இருந்தாலும் வேலைய ஓப்பி அடிக்காம உண்மையா உழைப்பனாதான் பிடிக்கும்.
அப்படியே இல்லைனாலும் மதிப்பு கொடுக்க பல பேர் இருப்பாங்க.
அய்யா நாட்டுல மிஞ்சி போனா 0.75% to 1.5% தான் இருப்பாங்க மொத்த தொழிலார்களில்். அவுங்களாவது இருக்குற வரைக்கும் கிடைக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியோ இருந்துட்டு போராங்களேன். உட்டுங்க பாவாம். நீங்க வந்து அதையும் புடுங்கிறாதீங்கோ. நீங்க என்ன நிம்மதி புடுங்குறதில ஹோல்சேல் டீலரா?. இல்ல மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா?.
அண்ணே முக்கியமா இத்த பதிவு பின்னூட்ட பொட்டிக்குள்ளே பின்னூட்டம் மட்டும் போடுங்கண்ணே .பின்னூட்ட பொட்டிக்குள்ளே பதிவு போட்டுருராதீங்கண்ணே. என்னால அவ்வளவு பொறுமையா உக்காந்து படிக்கமுடியாது. நேரமும் கிடையாது.நான் ரொம்ப பாவப்பட்ட கணினி வல்லுனர்னே கொஞ்சம் புரியும் படியா தமிழ்ல பேசுங்கண்ணே. உங்க வார்த்த ஜாலத்தை பின்னூட்டத்தில காமிகாதீங்கண்ணே. அப்புறம் நான் அழுதுடுவேன்.