தமிழ் புத்தாண்டு சித்திரையிலா, தையிலா?
[+/-] show/hide this postஇந்த பதிவில் தமிழ் புத்தாண்டை பற்றி இவர் ஏதோ கூறியுள்ளார். கொஞ்சம் தப்புதப்பா ஆணி அடிச்சு வச்சு இருகிறார்.
முதலில்
//தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.
//
இது மிக பெரிய அடிப்படை தவறு. அது ஆங்கில ஆண்டு கிடையாது. அது கிரேக்க காலண்டர். இதில் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு கிரேக்க கடவுள்களை குறிப்பிடுகிறது.ஒரு சில மாதங்கள் தவிர. அதாவது அக்டோபர் எனபது "Octo" என்பதில் இருந்து உருவானது.அதன் அர்த்தம் 8. அதேபோல் நவம்பர்,டிசம்பர் ,9,10.ஜனவரி எனபது "Janus" என்ற கிரேக்க கடவுளின் நினைவாக உள்ள பெயர். இந்தகடவுளுக்கு இரு முகங்கள். கிரேக்க நாட்காட்டியில் ஏப்ரலே பல நூறு ஆண்டுகளா தொடக்க மாதமாக் இருந்தது. ஒரு மன்னன் (பெயர் தெரியவில்லை) தன் விருப்ப கடவுளான ஜனஸ்க்காக ஆண்டின் தொடக்க மாதமா ஜனவரியை அறிவித்தான். அதாவது ஜனஸின் ஒருதலை கடந்த காலத்தையும், மற்றொரு தலை வருங்காலத்தையும் பார்பதாக கூறி மாற்றம் செய்யப்பட்டது. இதை அப்போது எதிர்தவர்கள்,அதாவது ஏப்ரல்தான் சரியானது என வாதாடியவர்கள் "ஏப்ரல் பூல்" என்று அழைக்கப்பட்டனர்.
ஆனால் மற்றவர்கள்தான் ஏப்ரல் பூல். ஏனெனில் புதுவருடம்,மாதம் சூரியன் வடக்கு,தெற்கு நக்ர்வை வைத்து அல்ல அது ஒவ்வொரு இராசி(இதற்க்கு சரியான அறிவியல் பெயர் தெரியவில்லை) தோன்றுவதை வைத்தே கணக்கிடப்டுகிறது. இதில் முதல் இராசியாந மேஷ்த்தில் சூரியன் வருவது புதுவருடமா ஆங்கில முறையை தவிர்த்து மற்றைய ஏனைய இந்திய முறைகளில் கொண்டாடப்படுகிறது.(சூரியன் உருவாகும் போது மேஷராசில் இருந்ததாக் அறிவியலில் நம்பப்படுகிறது) சமஸ்கிருத்தத்தை தழுவி அமைக்கபட்டு இருந்தால் மார்சிலே முடிந்து இருக்க வேண்டும்(குடிபடுவா(இந்தி), யுகாதி புரஸ்கார(தெலுகு்) ).தமிழிந் புதுவருடம் அதற்கு அப்புறம் 1 மாதம் கழித்துதான் வருகிறது. எனக்கு தெரிந்து தமிழ்மாதங்கள் தமிழ் பெயரில் இல்லை(எங்கோ படித்தது) :((( .
மற்றபடி புதுவருடம் சித்திரையில் இருப்பது சரியானதுதான் எனக்கு தெரிந்து.
நான் கூறிய விசயங்கள் நான் தெரிந்தெ(எப்பொழுதோ படித்த) அல்லது கேள்விபட்ட விசயங்கள். முழுமையாக நிறுபிக்க சுட்டிகள் இல்லை.
Labels: தமிழ், புத்தாண்டு.
1 மறுமொழிகள்:
தோழா! கிரேக்க ஆண்டை ஆங்கில ஆண்டு என்று திரு. மஞ்சை வசந்தன் குறித்திருப்பது,
வழக்கத்தின் அடிப்படையில் தானே தவிர வேறில்லை. தமிழர்களுக்கு, தங்களின்
விளைச்சலைக் கொண்டாடி, புது ஆண்டைத் தொடங்கிய பழக்கம்தான் இருந்தது. ஆனால்,
இடையில் புகுந்த கற்பனைப் புராணங்கள் காரணமாக ஆபாசக் கதையின் அடிப்படையில்
பிறந்தது 60 ஆண்டுகள் என்பதை எப்படி ஏற்பது. தமிழன் பண்பாட்டுக்கும்,
வாழ்க்கைக்கும், மொழிக்கும் எவ்விதத் தொப்டர்பும் இல்லை பெயர்கள் உட்பட பின்
எப்படி ஏற்பது.
comment pakkam thirakka late aakirathu. athanal intha thani madal. ithai
marumoziyaaka pirasuriththuk kollavum.
Post a Comment
<< முகப்பு (Home)