நமது "கவுஜ" முயற்சி....
[+/-] show/hide this postநண்பர்களே,
நமது வலையுல கவுஜ சங்க தலைவர் ஆசிப்ஜி அவர்களையும், வெண்பா தலைவர் இலவசகொத்தனார் அவர்களையும் ஏகலையன் முறையில் அவர்களின் அனுமதி இன்றி எனது குருக்களாக ஏற்று கவுஜ முயற்சியை தொடங்குகிறேன். தப்பு இருந்தால் தலையில மட்டும் குட்டுங்க :))))).
பணம்மில்லை.. பணத்தை தேடினேன்..
மணமாகவில்லை.. துணையை தேடினேன்..
கிக்யில்லை.. வேறு பிராண்டை தேடினேன்..
நிம்மதியில்லை.. கடவுளிடம் தேடினேன்..
ஒன்றை மறந்தேன்.. எதற்கு தேடுகிறேன் என்று..
காரின் சக்கரத்தை துரத்தும் நாய் போல்..
எதையோ ஒன்றை தேடுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------
எழுத மறந்த கவிதை.
......
......
......
......
......
......
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
-----------------------------------------------------------------------------------------------
சாதிகளை ஒழிப்பேன் என்று வீர சபதமிடுகிறார்..
சாதிகட்சி தலைவர்.
ஏழைகளுக்கும்,உழைக்கும் மக்களுக்கு குரல் கொடுக்கிறார்..
மைக் செட்டுகாரனுக்கு பட்டை போட்ட கட்சிதலைவைர்.
கோக்கு்கு எதிராக போராட்டம்
ஓங்கி குரல் கொடுத்தான் தொண்டன் காலையிலே
ஓசி நெப்போலியனில் தள்ளாடுகிறான் மாலையில
ஈனக்குரலில் முனங்குகிறான் விழுந்த சாக்கடையிலே
பட்டினியில் அழுகிறது ் குடும்பம் அடுக்களையிலே
-----------------------------------------------------------------------------------------------
இருட்டில் இணைகின்றன நிலவும் மேகமும்
உரசாமல் காதல் செய்ய.
-----------------------------------------------------------------------------------------------
வேலையில்லா பட்டதாரி..
விடிந்துவிட்டது இன்று
விடிவுக்காலம் என் வாழ்வில் என்று?
இன்றைய பொழுதும் கழிந்துவிடாதா நேற்றையபோல் அன்று.
-----------------------------------------------------------------------------------------------
கல்லறையை முத்தமிடுகின்றன..
பறிக்கப்பட்ட மலர்கள்.
மக்களே மேலேயுள்ளதில் எதாவது கவுஜ மாதிரி தெரியுதா?..
அப்புறம் வந்து மற்றததையும் சேர்க்கிறேன்.
Labels: கவுஜ
3 மறுமொழிகள்:
நாகரீகமா வாழுறதை விட்டுட்டு இதென்ன கவுஜை எழுத்து? :-)
படிக்கட்டு ஒழுங்கா போட்டிருக்குறதால இது கவுஜைதான். ஆனா, இன்னம் கொஞ்சம் கவனமா செதுக்குனாத்தான் கவுஜைக்கு பலம் கெடைக்கும்.
பணத்தை தேடினேன்ன்னு எழுதுனா உரைநடை. தேடினேன் பணத்தைன்னு எழுதுனாத்தான் கவுஜை. இதுதான் அடிப்ப்டை பாடம் 2
திரும்பவும் பாடம் எடுக்க வச்சுடுவீங்க போல. நல்லா இருங்கடே!!
கவிப்பகைவன்
சாத்தான்குளத்தான்
ஆபிஸ்ல ஆணி புடுங்குற வேலையில இங்க வர முடியல.
ஆனா எனக்கு நீங்க திரும்ப பாடம் எடுக்கனும் போல நான் அவ்வளவு வீக்கா இருக்கேன் போல.
:))
வலைப்பூ சுனாமியார் பாசறை அதை நான் "ஜெராக்ஸ் பண்ண மறந்த கவிதை"ன்னு பேர மாத்திடுரேன்
:))))))))))))))))))
Post a Comment
<< முகப்பு (Home)