இந்திய விண்வெளி துறையின் மகத்தான நாள்.

[+/-] show/hide this post

நேற்று (22-ஜானவரி-2007) இந்திய வின்வெளி துறையின் ஒரு மகத்தான நாள். அதாவது முதன் முதலாக பூமிக்கு திரும்பி வரக்கூடிய ஒரு கலத்தை(தற்போது இது செயற்க்கைகோளை மட்டுமே சுமந்து வந்துள்ளது) The Space capsule Recovery Experiment (SRE-1) வெற்றிகரகமாக செயல்படுத்தியுள்ளது.

10-ஜனவரி-2007 ல் விண்னில் செலுத்தப்பட்ட செயற்கைகோள் 12 நாள்கள் பூமியை சுற்றிவிட்டு நேற்று பூமிக்கு திரும்பி வங்காள விரிகுடாவில் சேதமின்றி பாரசூட் மூலம் குறிப்பிட்ட இடத்தில் விழந்தது.

ஒரு செயற்கை கோளை விண்வெளிக்கு அனுப்புவதைவிட அதை பூமிக்கு திருப்புவதுதான் மிக கடினமான செயல்.ஏனெனில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது ஏற்படும் உராய்வினால் உண்டாகும் வெப்பம் 2000-2500டிகிரி செல்சியஸ் வரை ஏற்படும்.இதுதான் மிகவும் சவாலான விசயம்.

தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் இந்தியாவால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி திரும்ப பெறமுடியாது. ஏனெனில் இந்தியாவால் இன்னும் விண்வெளி ஆடைகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அடையவில்லை.

அதேபோல் இந்தியா கிரையோஜெனிக் டெக்னாலஜீயை பெற பல வருடங்களாக போராடிக்கொண்டிருந்தது. இப்போது எவ்வாறு அடைந்தது என்று தெரியவில்லை. அதேபோல் மீள்செயற்க்கைகோள்களுக்கு ஒருவையான Alloy Metal and combination of Porcelain வெப்பத்தை தாங்குவதிற்கு தேவைப்படுகிறது.

எப்படியாக இருந்தாலும் ஆசிய கண்டத்தின் அரசியலில் இது இந்தியாவை மற்ற நாடுகள் திரும்பி பார்க்க வைத்துவிடும், பயப்படவைத்துவிடும்.

--------------------------------------------

பொது நியுஸ்






0 மறுமொழிகள்:

  1. Post a Comment

<< முகப்பு (Home)