வடா பாவ்!!!!!!!!!-சிங்கங்களுக்கு
[+/-] show/hide this postவடா பாவ்!!!!!!!!!
என்னதோ எதோ என்று நினைக்காதீர்கள். வேற ஒன்னுமில்ல நம்ம ஊர்பக்கம் போண்டா மாதிரி இங்கன(மும்பாய், பூனே) இது ஒரு சினாக்ஸ்( சில மக்களுக்கு இதுதான் சாப்பாடே அது வேற விசயம்).
வாடா பாவ் செய்யா தேவையானவைகள்:
- ஒரு உருளைகுழங்கு போண்டா.(இதை எப்படி செய்யரதுனு பட்டும் கேக்காதீங்க. நான் வரலை இந்த ஆட்டைக்கு). உருண்டையா இல்லாம கொஞ்சம் தட்டையா இருக்கனும்.
- ஒரு பன்னு.
- இரண்டு, மூனு உப்புல ஊறவச்ச பச்சைமிளகாய்.
- தேவைக்குக்கு மற்றும் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சட்டினியோ, சாம்பாரோ,அல்லது குருமாவோ.
- முதலில் பாவை எடுத்து அதாவது பன்னை எடுத்து குறுக்கு வாக்கில் இரண்டாக பிளக்க வேண்டும்.
- அதன் நடுவே உருளைகிழங்கு போண்டாவை வைக்க வேண்டும்.
- தேவைப்படும் காரத்திற்கேப்ப இரண்டு,அல்லது மூன்று பச்சைமிளகாய்யை வைத்து அதை அப்படியே சட்டினியில் முக்கி கடித்து சாப்பிடவேண்டும்.
நம்து தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி வலைப்பதிவாளர்களின் சந்திப்பில் போண்டா இருப்பதால், நாம் இங்கன பூனாவுல வலைப்பதிவாளர்கள் சந்திப்பில்(அனானிகள் உட்பட) ் வடா பாவ்வை நமது பாரம்பரியா சினாக்ஸ் ஆக்கிகொள்வோம். வெள்யூரிலிருந்து வருபவர்கள் கையோடு போண்டாவை கொண்டுவருமாரு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். யாராவது எலிகுட்டி சோதனையில் அது பழையா போண்டா என்று சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல.
டெயில் பீஸ்: முதன் முதலா நான் வாடாபாவ் சாப்பிடும் போது, போண்டா, பன்னு,மிளகாய் மூனையும் தனித்தனியாக சாப்பிட்டேன்.ஆதை பாத்த எனக்கு முன்னால இருந்த இரண்டு பிகருங்க என்ன பார்த்து ஒரு லவ்லி சுமைல் விட்டாங்க. அதுக்கு என்ன மீனிங்கு யாருக்காவது தெரியுமா?.
ஒர் உதவி:
எனக்கு பக்கத்து டெக்ஸ்ல உள்ள பிகரு தம்மடிக்குது,தண்ணிஅடிக்குது ஆனா என்கூட கடலை மட்டும் வறுக்கமாட்டேன்னுது.ஏன்னு யாரவது சொல்ல முடியுமா?.

![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)

17 மறுமொழிகள்:
- //எனக்கு பக்கத்து டெக்ஸ்ல உள்ள பிகரு தம்மடிக்குது,தண்ணிஅடிக்குது ஆனா என்கூட கடலை மட்டும் வறுக்கமாட்டேன்னுது.ஏன்னு யாரவது சொல்ல முடியுமா?.///
Edit Commentமேட்ச் பாக்ஸ் இல்லைன்னா குவாட்டர் கட்டிங் கேட்டு கடலையை ஆரம்பியுங்க.
:)))))))))))
- //மேட்ச் பாக்ஸ் இல்லைன்னா குவாட்டர் கட்டிங் கேட்டு கடலையை ஆரம்பியுங்க.//
Edit Commentஒசி வாங்குனே என்னை சைட்டுகூட அடிக்க விடாம துரத்திவிட்டுருவா
:)))))
- அனானி ஆட்டம் ஆடவேண்டும் என்றால் நீங்கள் முதலில் அனானிகளின் காட் பாதர்களை சந்திக்கவேண்டும். யாருன்னு சொல்லியா தெரியனும்.
Edit Comment- //ஒசி வாங்குனே என்னை சைட்டுகூட அடிக்க விடாம துரத்திவிட்டுருவா///
Edit Commentவேற வழியில்லை, பக்கம் தானே உட்காரனும் ? அப்படியே மல்டிப்ளக்ஸ் பக்கமா கூப்பிடுங்க ஹி ஹி...
அதைவிட அருமையான ஐடியா, நீங்க முதலில் ஹிந்தி பழகுங்க.
:)))))))))))))))
- பரவாயில்லை, மற்ற அனானிகள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியல்லை, கதைத்துவிட்டு சொல்கிறோம்.
Edit Comment- //அனானி ஆட்டம் ஆடவேண்டும் என்றால் நீங்கள் முதலில் அனானிகளின் காட் பாதர்களை சந்திக்கவேண்டும். //
Edit Commentஇது எனக்கு சத்தியமா தெரியாது.
பரவாயில்லை, மற்ற அனானிகள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியல்லை, கதைத்துவிட்டு சொல்கிறோம்.
தேங்ஸ்.
- //அப்படியே மல்டிப்ளக்ஸ் பக்கமா கூப்பிடுங்க//
Edit Commentஎன் பாக்கெட்டுக்கு குறி வச்சுட்டீங்களே.
அவ அங்க வந்து பாப்கார்ன் வேணும்னு கேட்டானு வச்சுக்களேன். 350 செலவு பண்ணி யாராவது வாங்கிதருவாங்களா?..
- பிறகு, ஓசியில கிடைக்க அது என்ன ஓஞ்ச வாழப்பழமா ?
Edit Comment- ஒசில கிடைக்கதுதான். ஆனா ஒருதடவை படத்துக்குகூட்டிட்டு போய் 1000,2000ரூபாய் செலவழிகிறது ரொம்ப ஓவரா இல்லையா?..
Edit Comment- வடா பாவ் மட்டும் சொல்லிட்டு இந்த 'பாவ் பாஜி' யைப் பத்திச் சொல்லாததை ' மெ(வ)ன்மையாகக் கண்டிக்கின்றேன்':-)))
Edit Comment- இப்படி இருந்தா ஒன்னும் செய்ய முடியாது...பல்லு இருக்கவன் பட்டாணி சாப்பிடறான் என்று விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியது தான் தலை :)
Edit Commentவீட்ல டீவிடி இருக்கா ?
- //வடா பாவ் மட்டும் சொல்லிட்டு இந்த 'பாவ் பாஜி' யைப் பத்திச் சொல்லாததை ' மெ(வ)ன்மையாகக் கண்டிக்கின்றேன்':-)))//
Edit Commentபாவ் பாஜி பத்தி அடுத்து போடலாமுனு இருந்தேன்.
அதும் இல்லாம கூட்டத்துக்குலாம் அதை பார்சல் பண்ணி கொண்டுவரமுடியாதுல அதனால விட்டுடேன்.
- //இப்படி இருந்தா ஒன்னும் செய்ய முடியாது...பல்லு இருக்கவன் பட்டாணி சாப்பிடறான் என்று விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியது தான் தலை :)//
Edit Commentடரைபண்ணி பார்ப்போம். நார்த் பிகருங்க சவுத் ஆளுங்க அவ்வளவ திரும்பி பாக்கமாட்டாங்க.
வீட்ல டீவிடி இருக்கா ?
இருக்கு ஆனா பாக்குறதுதான் இல்ல.
- என்னங்க இப்படி சொல்லிட்டீங்க ? நம்ம பயலுகளுக்கு இருக்கற திறமை வெள்ளைக்காரிகளையே மடக்கிரும் :)))
Edit Commentஉங்களிடம் இருக்கும் இந்த மொக்கையான தாழ்வு மனப்பான்மை தான் இதுக்கு காரணம்..
தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு, பவுடர் அடிச்சு தலை சீவுங்க..
(சனியன் சடைபின்ன ஆரம்பிச்சிருச்சி)
ஏன் டிவிடி பார்க்கலை ? நேரம் இல்லைன்னு சொல்லிறாதீங்க..
- //என்னங்க இப்படி சொல்லிட்டீங்க ? நம்ம பயலுகளுக்கு இருக்கற திறமை வெள்ளைக்காரிகளையே மடக்கிரும் :)))//
Edit Commentஆஹா...
:))
//ஏன் டிவிடி பார்க்கலை ? நேரம் இல்லைன்னு சொல்லிறாதீங்க..//
இங்க 5 படத்த ஒரே dvdல போட்டு இதுதான் dvd மூவீனு சொன்ன எப்படி பாக்கமுடியும். எப்பவாது வாரத்துகு ஒருதடவை ஊரு விட்டு ஊரு போயி ஒரிஜினல் DVD வாங்கி பாத்தான் உண்டு.
- //எனக்கு பக்கத்து டெக்ஸ்ல உள்ள பிகரு தம்மடிக்குது,தண்ணிஅடிக்குது ஆனா என்கூட கடலை மட்டும் வறுக்கமாட்டேன்னுது.ஏன்னு யாரவது சொல்ல முடியுமா?.//
Edit Commentடியோடரண்ட், பெர்ப்ஃயூம்னு ஏதாவது யூஸ் பண்ற பழக்கமுண்டா தல?
- //டியோடரண்ட், பெர்ப்ஃயூம்னு//
Edit Commentஅப்படினா?
Post a Comment
<< முகப்பு (Home)