முட்டாள் கணினி வல்லுனர்கள்? -to ROSAVASANTH

[+/-] show/hide this post

எனது முந்தை பதிவான real esatate booming!!! இல் ROSAVASANTH அவர்கள் இந்த பின்ன்னுட்டத்தை இட்டார்கள். அதில் கணினி வல்லுனர்கள் அனைவருமே முட்டாள்கள் என்பது போல் கூறியிருந்தார்கள்
IT மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது மிக மேலோட்டமான ஒரு self centered சிந்தனை மட்டுமே. (மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது, மிக குறைந்த அறிவு மூலதனத்தோடு, அல்லது அது இல்லாமலேயே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களை ஏமாற்றினால் அது ஒரு பெரிய சமூக பிரச்சனையும் அல்ல. ஆனால் பிரச்சனை அத்தனை எளிதானது அல்ல)
என்ன அளவிற்கு உழைத்தாலும், அறிவை பயன்படுத்தினாலும் ஐடி துறையில் இருப்பது போல் சம்பாதிக்க முடியாத யதார்தம், (அதே நேரம் முட்டாள்கள் கூட லட்சக்கணக்கில் IT துறையில் சம்பாதிக்கலாம் என்ற யதார்தம்) மற்ற துறைகளை பாதித்து கொண்டிருக்கிறது.

எதன் அடிப்படையில் அவ்வாறு கூறினார்கள் என்று கூறினார்கள் என்று தெரியாவில்லை. சொந்த அனுபவமா?( :) ). இல்லை கீழ்காணும் எதாவது ஒரு காழ்புணர்ச்சியா?.

 1. செஞ்சட்டைகாரர்களால் இதுவரை இதற்குள் புகுந்து கலகம் விளைவத்து கழகம் தோற்றுவிக்கமுடியாவில்லை என்பதலால?
 2. பொது புத்தியில் இங்கு இடஒதிக்கீட்டை அறிமுக படுத்த முடியவில்லை என்பதாலா?. :)
 3. சிறுபான்மையினர்க்கு இடஒதிக்கீட்டு அளித்து ஒட்டு சேகரிக்க முடியவில்லை என்பதாலா?.
முட்டாள்களுக்கு ரூ30,000 - ரூ1,00,000 வரை இந்தியாவில் சம்பளம்தர முடிகிறது எனில், வேலைகொடுப்பவர்களும் முட்டள்களா?.

முட்டாள்கள் எனில் ஏன் அதிக முட்டாள்களால் இன்னும் அந்த துறையில் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை ஏமாற்றுவதில் தவறில்லை என்று கூறும் நீங்கள் மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை ஏமாற்றுகிறான் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கூறமுடியுமா?

இங்கு யார் வேன்டுமானாலும் கும்மி அடிக்கலாம். வேலைப்பளு இருப்பதால் அடிக்கடி பதில் கொடுக்க முடியாது. இருந்தாலும் முடிந்த அளவு ஒத்துழைப்பு தருகிறேன்.

37 மறுமொழிகள்:

 1. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  You had it.Be prepared to be called as a slave with no identity.
    Edit Comment
 2. Comment at Blogger Vajra மொழிந்தது...
  welcome to the club
    Edit Comment
 3. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  நான் எந்த கட்சி சார்பும், சாதிசார்பும், மதசார்பும் கிடையாது. நான் என்னைக்குமே சோத்துக்கட்சிதான். நம்மள பொருத்த வரைக்கும் கையில காசு வாயில தோசை. எனக்கும் ROSAVASANTH எந்த விரோதமும் கிடையாது.
  எனக்கு அவர்மேல் எந்த காழ்புணர்ச்சியும் கிடையாது. கருத்து வேற்றுமை மட்டும்தான்.

  அனானி நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. IT professional எல்லோரும் அடிமைகள் என்று கூறவருகிறீர்கள் எனில் ஒரு பழமொழி உண்டு.

  " Look in to the Brighter Side"
    Edit Comment
 4. Comment at Blogger சட்னி சாம்பார் மொழிந்தது...
  நாடோடி அவர்களே. நீங்கள் ரோசாவசந்த் கூறியதினை மேலோட்டமாக பார்க்கிறீர்கள்..

  புற்றீசல் போல டாக்ஸை மிச்சப்படுத்த 35 லட்சம் 45 லட்சம் என்று கொட்டி வீடு வாங்குபவர்கள் முட்டாள்கள்தான்.

  அதே நிலத்தை ஊருப்பக்கம் வாங்கி அருமையாக வீடுகட்டி வாழலாமே..

  ஆட்டு மந்தைக்கூட்டமும் இந்த ஐ.டி கூட்டமும் ஒன்று.

  நானும் ஐடியில் குப்பை கொட்டுபவன் தான். அதனால் தான் சொல்கிறேன். அவர் சொல்வது சரி என்று.

  ஆமாம் ஐடியில் இருப்பவன் என்ன பெரிதாக கிழிக்கிறான் என்கிறீர்கள் ? நாலு கோடிங்கை கடம் அடித்துவிடுதல் ( பிப்போனஸி ஸீரிர், ஸ்டாக் என்று ஏதாவது), நாலு க்வெரியை ஒப்பேத்துதல், வெள்ளைக்காரன் கண்டறிந்த சி, சி++, வி.பி, டாட் நெட் என்றி ஏதாவது ஒன்றை நல்லா குடித்து வாந்தி செய்தல்...

  அதுவும் இந்திய ஐடி துறையினர் மிகவும் கேவலம். ஆட்டு மந்தைகள் என்றால் மிகையாகாது. பிறகு எந்த டெக்னாலஜியை அய்யா நீங்கள் கண்டுபிடித்தீர் ?

  இண்டர்வியூவில் ஆங்கிலத்தில் ஏதாவது உளறிக்கொட்டி, ரெஸ்யூமில் கயமை பல செய்து, வேலையை வாங்கி,

  இமெயிலில் வேலை செய்வது. ஓசி போனில் கடலை வறுப்பது.

  அடப்போங்கப்பா.
    Edit Comment
 5. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  to சட்னி சாம்பார்
  ஏன் நம்ம தொழிழ்சங்க வாதிகள் என்ன சாதித்து கிழித்தார்கள். சங்க தலவராக இருந்து கொண்டு நிறுவனத்தயையும், அரசாங்கத்தையும் மிரட்டுவதுமட்டுமே தொழிலா கொண்டுள்ளனர். அந்த மாதிரி செய்யாததால் ஒரு வேளை முட்டாள்களாக இருக்கலாம்.

  உங்களின் பதில்களுக்கு பல் வேறு எதிர்கேள்விகள் உள்ளது. நேரம் கிடைத்தரும் வருகிறேன்.
    Edit Comment
 6. Comment at Blogger ILA(a)இளா மொழிந்தது...
  //மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை ஏமாற்றுகிறான்//
  இதுல எங்கேயா சாதி வந்துச்சு?
  சாதி வெச்சு எடுக்கிற IT கம்பெனி எங்கே இருக்கு?
    Edit Comment
 7. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //
  //மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை ஏமாற்றுகிறான்//
  இதுல எங்கேயா சாதி வந்துச்சு?
  சாதி வெச்சு எடுக்கிற IT கம்பெனி எங்கே இருக்கு?
  //

  தங்களின் புரிதலில் குறைபாடா அல்லது எனது எழுத்தில் குறைபாடா என்று தெரியவில்லை.
  ROSAVASANTH கணினி வல்லுனர்கள் ஏமாற்றபபடுவதில்லை தவறில்லை.அவர்கள் ஏமாற்றபடவேண்டும் என்பது போல் கூறினார். அதனால் தான் அவரிடம் அந்த கேள்வி வைத்தேன்.

  2,3 பாயின்ட் தங்களின் இரண்டாவது கேள்விக்கு பதில்.

  மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன். இது கருத்துவேற்றுமையே.
    Edit Comment
 8. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //இமெயிலில் வேலை செய்வது. ஓசி போனில் கடலை வறுப்பது.//
  இதை வைத்து ஒரு பொது முடிவிற்கு வருகிறீர்கள்?.
  பிரீயா பினாயில் கிடைத்தால்கூட நம்ம ஆ்ள்ள்கள்ட்கள் குடிப்பார்கள். இதில் யாருக்கும் இன, மொழி,சாதி,தொழில் பாகுபாடு கிடையாது.

  //இண்டர்வியூவில் ஆங்கிலத்தில் ஏதாவது உளறிக்கொட்டி, ரெஸ்யூமில் கயமை பல செய்து, வேலையை வாங்கி, //
  communication skill இதுவும் ஒரு திறமை. இது இல்லையெனில் how we can undersatand the needs of the customer?..
  இதற்கு தங்களிடம் எதாவது மற்று இருக்கிறதா?. இருந்தால் கொடுங்கள் தங்களுக்கு புண்ணியமாகும். எனக்கு மாபெறும் உதவி செய்ததுபோல் ஆகும்.
    Edit Comment
 9. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  ரோசாவசந்த் என்ற வட(எச்சக்)கலை ஐயங்கார் தன்னைத்தவிர இந்த உலகத்தில் எல்லோரும் முட்டாள்கள் என்ற எண்ண மமதையில் சுற்றித்திரியும் நவயுக அடக்குமுறை பார்ப்பானீயவாதி. he is the manifestation of the ugly face of brahminism.

  அவரைப் பொறுத்தவரையில் either you agree with him and get certified as \\\"intelligent\\\" or you disagree with him and get certified as \\\"Fool\\\".

  இது போன்ற முட்டாளிடமிறுந்து சர்டிஃபிக்கேட் வாங்கித்தான் அறிவாளிகள் என்று கூறிக் கொள்ளவேண்டிய அவசியம் கணினித் துரையில் வேலைபார்ப்பவர்களுக்கு இல்லை.

  அவருக்கு செஞ்சட்டை, கம்யூனிசம் என்பதெல்லாம் ஒரு உடை, அதிகாரத்தைக் கையில் எடுக்க. அது வரை, அதை அணிந்துகொண்டு மேலே இருப்பவர்களை மிரட்டுவதும் காழ்ப்புணர்ச்சியில் திட்டுவதுமே முழுநேர வேலையாகக் கொண்டுள்ளவர்.

  he is using the ideologies to further his own interests.
    Edit Comment
 10. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //புற்றீசல் போல டாக்ஸை மிச்சப்படுத்த 35 லட்சம் 45 லட்சம் என்று கொட்டி வீடு வாங்குபவர்கள் முட்டாள்கள்தான். //

  நீங்கள் வருடத்திற்கு சுமாரா 3.5 இலச்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் எனில் நீங்கள் எவ்வளவு பணம் அரசாங்கத்திற்கு வருமான வரியாக செலுத்துவீர்கள் என்று தெரியுமா?.. ஏனெனில் தோராயமாக 3.5 தாண்டும்போது நீங்கள் 30% வரிக்குள் நுழைகிரீர்கள். அது மட்டுமல்லாமல் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நாம் எவ்வளவு வரி கட்டுகிறோம் என்று தெரியுமா?.
  நாம் கொடுகின்ற பணம் எல்லாம் அரசியல்வாதிகளின் சட்டைபைக்கும், இலவச டீவீ போன்ற திட்டங்களுக்குதான் போகிறது. இதை வைத்து ஏதாவது அடிப்படை கட்டமைப்புக்கள், சுகாதாரம், புதிய வேலைவாய்ப்புக்கள், அடிமட்ட மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தபட்டிருக்கிறதா?.
  பின் எவன் தான் வரியை குறைக்காமலிருக்க பாடுபடுவான்.

  வடுடத்திற்கு 10இலச்சத்திற்கு மேல் வாங்குபவர்கள் கூட வீட்டுக்கடன் வத்திருப்பதை நான் பார்திருக்கிறேன்.
    Edit Comment
 11. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //அதே நிலத்தை ஊருப்பக்கம் வாங்கி அருமையாக வீடுகட்டி வாழலாமே..//
  இதை நான் ஏற்கனவே என் முந்தய பதிவில் கூறியுள்ளேன்.
  இதிலும் சிக்கலே.

  நான் ஐ.டி மக்கள் தவறு செய்யவில்லை என்று கூறவில்லை.
  நான் என் முந்தய பதிவில் கூறியதுபோல் இவர்களின் வருமான வரியை சேமிப்பதற்காக போடும் சண்டையில் மற்றவர்களும் பாதிக்கபடுகிறார்கள் என்று அறிவுறுத்தவே. இதை வைத்து பலர்(அரசியல்வாதிகள், அரசு அலுவல்ர்கள்,மற்றும் பலர்)குளிர்காய்கிறார்கள்.

  //நானும் ஐடியில் குப்பை கொட்டுபவன் தான். அதனால் தான் சொல்கிறேன். அவர் சொல்வது சரி என்று.

  ஆமாம் ஐடியில் இருப்பவன் என்ன பெரிதாக கிழிக்கிறான் என்கிறீர்கள் ? நாலு கோடிங்கை கடம் அடித்துவிடுதல் ( பிப்போனஸி ஸீரிர், ஸ்டாக் என்று ஏதாவது),//
  தங்களை வைத்து ஒரு பொது முடிவுக்கு வர வேண்டாம். பேசி தீர்த்துக்கொள்வேம்.;))))))))))))))))))))))))

  //வெள்ளைக்காரன் கண்டறிந்த சி, சி++, வி.பி, டாட் நெட் என்றி ஏதாவது ஒன்றை நல்லா குடித்து வாந்தி செய்தல்...//
  அதை ஒரு வெள்ளைக்காரன் மட்டும் தனியே செய்யவில்லை.நீங்கள் கூறியது எல்லாமெ Microsoft products. Microsoftல் எத்தனை இந்தியர்கள் உள்ளார்கள் என்று தெரியுமா?.
    Edit Comment
 12. Comment at Blogger ஜோ / Joe மொழிந்தது...
  நானும் மென்பொருள் துறையில் தான் இருக்கிறேன் .ரோசா வசந்த் ஒப்பீட்டளவில் கூறியதில் தவறு இருப்பதாகவோ ,அதை தனித்தனியே ஒவ்வொருவரும் தனக்கு பொருத்திப் பார்க்க அவசியம் இருப்பதாகவோ நான் கருதவில்லை.
    Edit Comment
 13. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //பிறகு எந்த டெக்னாலஜியை அய்யா நீங்கள் கண்டுபிடித்தீர் ?//

  தனியொருவரு புது டெக்னாலஜியை கண்டறியமுடியுமா?.
    Edit Comment
 14. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //நானும் மென்பொருள் துறையில் தான் இருக்கிறேன் .ரோசா வசந்த் ஒப்பீட்டளவில் கூறியதில் தவறு இருப்பதாகவோ ,அதை தனித்தனியே ஒவ்வொருவரும் தனக்கு பொருத்திப் பார்க்க அவசியம் இருப்பதாகவோ நான் கருதவில்லை.//

  நான் கூறவருவது சமுதாயத்தில் மென்பபொருள்,கணினி வல்லுனர்களின் மீது தவறான கண்ணோட்டம் உள்ளது.
  அதாவது சும்மா உக்கார்ந்துகொண்டே பல ஆயிரங்கள் சம்பாதிக்கிறார்கள், இந்திய கலாச்சாரத்தை விட்டு மேல்நாட்டு காலாச்சாரத்தில் அழைகிறார்கள்,இன்னும் பல.

  நான் இங்கு பூனே வந்த புதிதில் ஒரு வீடை வாடகைக்கு எடுக்க முடியவில்லை. even a local Colleague with me. I can't able to contact the house owner directly.They are forcing me through house brokers. And the moment the owner, and brokers came to know i am am IT professional. the rates are getting differ. Brokers started asking 2 months rent as brokerage for normel people it is one month and even they don't need to approach the brokers. The reason they are telling is "you are working in the Software Industry. You will get good salary. You can afford this amount".
  Do u think this is fair?

  //அதை தனித்தனியே ஒவ்வொருவரும் தனக்கு பொருத்திப் பார்க்க அவசியம் இருப்பதாகவோ நான் கருதவில்லை//
  ROSAVASANTH என்னை ஆறிவாளி என்று கூறவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அதனால் எனக்கு 10பைசா பிரயோசனம் கிடையாது.;))))))))))))

  எனக்கு என் project Manager என்னை அறிவாளி என்று கூறி என் apprisalலி நல்ல increment குடுத்தால் போதும்.:))))))))))))))))))
    Edit Comment
 15. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  //
  ெள்ளைக்காரன் கண்டறிந்த சி, சி++, வி.பி, டாட் நெட் என்றி ஏதாவது ஒன்றை நல்லா குடித்து வாந்தி செய்தல்...
  //

  வெள்ளைக்காரரான ROSA பெயரைத்தானே தன் புணைப்பெயரில் வைத்துக்கொண்டுள்ளார்.

  வெள்ளைக்காரரான மார்க்ஸ் சொன்னதை எழுதிய Engels, Rosa வின் எழுத்துக்களை கடம் அடித்து வலைப்பதிவில் வாந்தி எடுத்துக் கொண்டுள்ளனர்களே. அவர்களை என்னவென்று சொல்வது ?
    Edit Comment
 16. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  எதோ என் சொந்த பின்னூட்ட கயமையில(7)் முதல் தடவையாக 10ஐ தாண்ட,ி முதல்தடவையாக இரண்டு தசம எண்ணிற்குள் நுழைந்துவிட்டேன். ;))))))
    Edit Comment
 17. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //வெள்ளைக்காரரான ROSA பெயரைத்தானே தன் புணைப்பெயரில் வைத்துக்கொண்டுள்ளார்.//
  அனானி அவர்க்ளே சட்னி சாம்பார்தான் அந்த கருத்தை சொன்னார். ROSAVASANTH சொல்லவில்லைவே. அதனால் அந்தகருத்தை அவருடன் சம்பந்தபடுத்தவேண்டாமே.
    Edit Comment
 18. Comment at Blogger சட்னி சாம்பார் மொழிந்தது...
  உமது பதிவில் அனானி ஆட்டம் ஆடலாம் என்று நன்பர்கள் விரும்புகிறார்கள்..

  என்ன சொல்கிறீர் ?
    Edit Comment
 19. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //உமது பதிவில் அனானி ஆட்டம் ஆடலாம் என்று நன்பர்கள் விரும்புகிறார்கள்..//

  எனது பதிவு அனைவருக்கும் திறந்த புத்தகம்.

  let start லொள்ளு.
  one...
  two...
  three...
  go....
    Edit Comment
 20. Comment at Blogger அசுரன் மொழிந்தது...
  உங்க சம்பளம் நியாயமான சம்பளமா? அப்படியில்லேன்னு எல்லாரும் நினைக்கிறாங்க......

  அசுரன்
    Edit Comment
 21. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  போங்கடா வெண்ணைகளா!

  இதெல்லாம் ஒரு டாபிக். போய் வேலைய பாருங்க.

  ---அனானி சங்க கொ.ப.செ.---
    Edit Comment
 22. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //உங்க சம்பளம் நியாயமான சம்பளமா? அப்படியில்லேன்னு எல்லாரும் நினைக்கிறாங்க...//

  நாங்க என்ன போராட்டம் பண்ணியா அதிக வருமானம் வாங்குறோம். அவங்களே கொடுக்குறாங்க.

  ஒரு example.

  உள்ளுரில் இருக்கும் ஒரு நிறுவனம் ஒரு பொருளை தயாரிக்க 1ரூபாய் செலவு ஆகின்றது எனில் குறைந்தபட்சம் அதன் விற்கும் விலை 1.50லிருந்து 2க்குள் இருக்கும் போதுதான் அதனால் லாபம் பாக்கமுடியும். இங்கு லாபத்தை அதிகரிக்க உள்ள வழிகள் cost cutting in all the possible ways. the ways are reducing the labour charge,and increasing the production Rate.ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவிற்குள் இதை இரண்டையும் பண்ணமுடியாது.ஒரு அமெரிக்க நிறுவனமும் அதன் நாட்டிற்குள் இதை பண்ணமுடியாது.

  எடுத்துக்கட்டாக USல் ஒருவர் வாழ குறைந்தது $2000-3000(அதாவது மாதம் ரூபாய்1,00,000-,1,50,000). ஆனால் அதுவே இந்தியாவில் ரூ5,000-15,000 போதும் நடுத்தர வர்கத்திற்கு.
  so outsourcing பண்ணுவதால் தொழிலாளி முதலாளி இருவரும் பயனடைகின்றனர்.இங்கு ஒருவருக்கு மாதம் ரூ25,000 தருவதால் அவர்களுக்கு செலவு $1500. இங்கு நமக்கு அதிகமான் வருமானம்.இதனால் உழைப்பாளி இன்னும் கடுமையா உழைப்பான்.

  நியாயம்,அநியாயமான சம்பளம் என்பது அவரவர் பார்வைக்கு உட்பட்டது. அது என்னமோ தெரியல எல்லோருக்குமே சம்பளம் மட்டுமே கண்ணை உறுத்துகிறது. மற்ற துயரங்கள் கண்ணில் படமாட்டேனுது..;)))
    Edit Comment
 23. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  //இதெல்லாம் ஒரு டாபிக். போய் வேலைய பாருங்க.//

  நாளைக்கு ஒரு மாசால டாப்பிக்கோட வரேன்.
  ஓ.கே.வா?.
    Edit Comment
 24. Comment at Anonymous அமுக ஒருங்கினைப்பு குழு, பெங்களூர் மொழிந்தது...
  ஆமாம் அவர் சொல்வது சரி. நாளை தீப்பிடிக்கும் ஒரு பதிவோடு வாருங்கள்

  நூறு நிச்சயம்..

  வாழ்த்துக்கள்...!!!
    Edit Comment
 25. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  Mr. ROSAVASANTH i am waiting for Your answers...
    Edit Comment
 26. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  பின்னூட்ட கயமை..
    Edit Comment
 27. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  //அசுரன் said...

  உங்க சம்பளம் நியாயமான சம்பளமா? அப்படியில்லேன்னு எல்லாரும் நினைக்கிறாங்க......

  அசுரன் //

  எல்லாரும்னா யாருங்க...
  அதைவிட கீழ வாங்கறவங்கதான?

  People working in Indian S/W company always think that people in MNC'are getting more... it goes on...

  எல்லா மனிதர்களும் சுயநலவாதிகளே

  அப்பறம் இந்த வேலைகள்ல முட்டாள்கள்தான் அதிகம் இருக்காங்கனு சொல்ற அந்த புத்திசாலிங்க படிக்கும் போது என்ன மார்க் எடுத்தாங்க?

  படிப்புக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இல்லைனு சொல்ற புத்திசாலிங்க அவுங்க பசங்க ஃபெயில் ஆனா சந்தோஷ படுவாங்களா?

  என்னைய கேட்ட மெக்கானிக்கல் கம்பெனில மூளையே பயன்படுத்தாம வேலை செய்யறவங்களைவிட சாப்ட்வேர் கம்பெனி எவ்வளவோ பரவாயில்லைங்க

  அப்பறம் காப்பி பண்ணறதபத்தி சொல்றவங்க கொஞ்சம் யோசிங்க. காப்பி அடிச்சா அப்படியே வேலை செய்யாது. அதை புரிஞ்சி நம்ம தேவைக்கு மாத்தனும். அதுக்கு புத்தி வேணும்.

  அப்படி இருக்கறவங்க வேணும்னா நம்ம கூகுல் மாதிரி ஒரு சர்ச் இஞ்சின் கண்டுபிடிக்க பாருங்க...

  மூளை இல்லாதவனுக்கு சம்பளம் கொடுக்க எவனும் மூளை இல்லாதவன் ஒண்ணும் கம்பெனிய நடத்துல.

  எங்களால எவ்வளவு பிஸினஸ் நடக்குதுனு பாருங்க தெரியும்... ICICI Bankல இண்டர்நெட்ல பணம் அனுப்பறீங்க... வேற ஒருத்தவன் அக்கவுண்டுக்கு போனா ஒத்துக்குவீங்களா? இல்லை ATMலபணம் எடுக்கும் போது உங்க அக்கவுண்ட்ல இல்லைனு சொன்னா ஒத்துக்குவீங்களா?
    Edit Comment
 28. Comment at Blogger சந்தோஷ் aka Santhosh மொழிந்தது...
  நான் ரோஸா வசந்த் போட்ட பதிவை படிக்கவில்லை. ஆனாலும் பின்னூட்டங்களை வைத்து பார்க்கும் பொழுது சில விஷயங்கள் நியாயமாக படுகிறது.
  //தனியொருவரு புது டெக்னாலஜியை கண்டறியமுடியுமா?. //
  ஏன் முடியாது. கூகிலில் வரும் எல்லா ஜடியாக்களும் தனியொருவனின் சிந்தனைதான்(Infact கூகூலே இரு கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ஜடியாத்தான்.). மேலும் Microsoft என்ற மாபெரும் நிறுவனமே Basic என்ற ஒரு சிறிய மொழியின் துவக்கமே. இந்திய கம்பெனிகள்/இந்தியர்கள் பெரும்பாலும் services துறையில் தான் உள்ளன product development and innovative products துறையில் பெரும்பாலானோர் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் உலக அளவில்/உலகத்தரமான இந்திய product development company எதுவும் கிடையாது. நீங்கள் ஒத்துக்கொண்டாலும் இந்திய கணிப்பொறியாளர்கள் பெரும்பாலும் படித்து விட்டு வாந்தி கேஸ் தான்(என்னையும் சேர்த்து.). நம்ம எல்லாரும் பெரிய ஞானிகள் அதனால் தான் மல்டிநேஷனல் கம்பெனிகள் இங்க வந்து கடையை திறக்கிறார்கள் என்று நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். இன்றைய நிலைமையில் இந்தியர்கள் தான் ஆங்கில அறிவு மற்றும் குறைந்த சம்பளத்தில் கோடு அடித்து கொடுத்தல் வேலையை செய்து தருகின்றனர். எனவே தான் இங்க வருகின்றனர். நாளைக்கே வேறு ஏதாவது ஒரு நாடு இது போன்று ஆங்கில புலமை பெற்றுவிட்டு நம்மைவிட குறைந்த காசுக்கு கோடு அடித்து கொடுத்தால் அவங்க சுலபமா அங்க போயிடுவாங்க. பெரும்பாலும் இங்கு நமக்கு கிடைப்பது maintenance projects தான். இது தான் உண்மை மத்தது எல்லாம் சும்மா ஜல்லி.
    Edit Comment
 29. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  Santhosh,
  FYKI, dont think that service industry as a simple one. Even trillions of dollars are involved in that.

  Accenture is a servie based company. Now its acquiring product based companies. Product based companies like Oracle cannot survive in Retail market if they dont have company like Accenture who do customization of their products for clients and get the market for them.
  (Microsoft cannot survive if there are no service industries)

  Even companies like TCS, Infosys, Satyam are doing such customization which you may think as Service based but its a produt for that particular client and cannot be used for different client. Dont think that are so simple. They do have multiple systems and integrating different products is not a simple task...

  Its same for banking too.

  You may think whatever u do is junk bcos u would have expected that u will be writing an algorithm for Rocket programming. If you wish, then do take risk.

  Think abt hotmail, its developed by an Indian. If you have that talent to make business you can do such things. But you dont want to take risk.
    Edit Comment
 30. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  அப்படினா அசுரன், ரோசாவசந்த உங்க இருவரை பொருத்தவரையில் முட்டாள்கள் ஏமாற்றப்படுவதில் தப்பில்லை. அப்படித்தானே?

  அப்பறம் முட்டாள் அதிகமா சம்பளம் வாங்க கூடாது. அவனவன் புத்திசாலித்தனத்துக்கு ஏத்த மாதிரிதான் சம்பளம் வாங்கனும். அப்படித்தானே?
    Edit Comment
 31. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
  Hello All of you....

  I am a computer business analyst. Not doing your coding. I did coding for 10 years. Once I made my money for my family security (food, house and Insurence money), Just came into business analyst. I did not have security back in india. SO I have to create my security first to get into inveting things. Except few people everyone in this world is using something from other 90%. The guys who created Cell phone camera is an indian. Who created email id logic is an india...Every one in this world cannot invent something in their own...Thats impossible....

  This will be same any industry. Since the IT is core business product so IT people are making good money. A pharamacist in USA is making more than avarage IT person in USA.

  So IT people are Fools is just Jealous .....

  IT people Pride other fools envy
    Edit Comment
 32. Comment at Blogger கால்கரி சிவா மொழிந்தது...
  ஐயோ....யாராவது ரோசாவின் பதிவிற்கு லிங்க் தாருங்களேன்
    Edit Comment
 33. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும், மற்றும் அனானி நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  கால்கரி சிவா அவர்களே கீழேயுள்ளது ROSAVASANTH அவர்கள் எனது முந்தைய பதிவில் இட்ட பின்னூட்டம்.
  "IT மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது மிக மேலோட்டமான ஒரு self centered சிந்தனை மட்டுமே. (மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது, மிக குறைந்த அறிவு மூலதனத்தோடு, அல்லது அது இல்லாமலேயே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களை ஏமாற்றினால் அது ஒரு பெரிய சமூக பிரச்சனையும் அல்ல. ஆனால் பிரச்சனை அத்தனை எளிதானது அல்ல). இந்த IT boom என்பது வந்து, அதன் காரணமாய் இந்த ITகாரன்கள் எல்லாவற்றுக்கும் எந்த விலையும் தர தயாராய் இருப்பதால், அதாவது demand இருப்பதால்தான் விலை ஏறியுள்ளது. இதில் அடிப்படை பிரச்சனை IT என்ற துறையில்தான் உள்ளது. இதன் காரணாமாய் IT காரர்களை தவிர வேறு யாரும் வாழமுடியாத ஒருய் சூழ்நிலையை உருவாகிக் கொண்டிருக்கிறது. என்ன அளவிற்கு உழைத்தாலும், அறிவை பயன்படுத்தினாலும் ஐடி துறையில் இருப்பது போல் சம்பாதிக்க முடியாத யதார்தம், (அதே நேரம் முட்டாள்கள் கூட லட்சக்கணக்கில் IT துறையில் சம்பாதிக்கலாம் என்ற யதார்தம்) மற்ற துறைகளை பாதித்து கொண்டிருக்கிறது. இவர்கள் அதிக விலை தர தயாரக் இருப்பதாலேயெ விலை ஏறுகிரது, அது மற்றவர்களை பாதிக்கிறது. ஆகையால் இது ஒரு கூட்டுகொள்ளை! இதில் பாதிப்படைபவர்கள் ITயுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களே!"

  நம் சமுதாயத்தில் இதைபோல் மென்பொருள்வல்லுனர்களை பற்றி தவறான எண்ணங்கள் பல உள்ளது. US,Europe இந்த மாதிரி தவறான் எண்ணங்கள் இருப்பதாக தெரியவில்லை. அங்கும் மற்ற தொழில்கள்போல் இது ஒரு சாதாரண தொழிலாக பார்க்கப்படுவதாக சொல்கின்றனர்.
    Edit Comment
 34. Comment at Blogger ROSAVASANTH மொழிந்தது...
  அடக்கொடுமையே, இப்போதுதான் இந்த கண்ராவியை பார்த்தேன். நான் கணிணி துறையில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று எங்கு சொன்னேன்? என்னால் எல்லா பின்னூட்டங்களையும் படிக்க முடியவில்லை. ஏதோ உங்களுக்கு எல்லாம் பொழுது போனாச்சரி!
    Edit Comment
 35. Comment at Blogger அசுரன் மொழிந்தது...
  I asked about Salary...

  That doesn't mean I support the Claim that IT people are Fools.

  And Indeed I am requesting IT people to look at their poor future and present.

  Please visit my English blog to know more about IT field:

  kaipulla.blogspot.com


  Asuran
    Edit Comment
 36. Comment at Blogger bala மொழிந்தது...
  //And Indeed I am requesting IT people to look at their poor future and present. //

  அசுரன் அய்யா,

  IT துறையில் எதிர்காலம் கேள்விக்குறியே என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
  ஆனா அதுக்காக இப்பவே உங்க இயக்கத்திலே சேர்ந்துட்டா நிகழ்காலம்/எதிர்காலம் இரண்டும் ஓரளவுக்கு நல்லா இருக்கும்னா உங்க பின்னாடி வர நமது இளைஞர்கள் தயாரா இருப்பங்கய்யா..
  நம் நாட்டு இலைஞர்கள் என்ன துறையை தேர்ந்தெடுத்து உங்க இயக்கத்திலே சேர்ந்து எப்படி உங்க லெவெலுக்கு top management ஆளும் வர்க்கமா வரமுடியும்ன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா.

  பாலா
    Edit Comment
 37. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
  sorry Mr.ROSAVASANTH .
  நான் பதிவு போட்ட பிறகு அவ்வளவாக திரும்பி கவனம் செலுத்தமுடிவதில்லை. அதனால் பதிவின் நோக்கம் திரும்பி விட்டதோ என்று தோன்றுகிறது.

  நான் தங்களிடம் எதிர்பார்த்த பதில்
  //ஏமாற்றினால் அது ஒரு பெரிய சமூக பிரச்சனையும் அல்ல.//
  ஒருவன் ஏமாற்றட வேண்டும் என தாங்கள் விரும்புகிறீர்களா?..இதிலிருந்து பதிவு திரும்பிவிட்டது.

  என்னை பொருத்தவரைக்கும் எதிரிகள்கூட எமாற்றபடக்கூடாது என்பது என் எண்ணம்.

  நான் கூற வந்தது சமுதாயத்தில் IT என்பது ஏதோ பணம்காய்க்கும் தொழில் என்ற தாவறான கண்ணோட்டம் உள்ளது என்பதை.
  வருகிறன் போகிறவன்,எல்லாவனும் ஏமாத்தபார்க்கிறான்.
  இந்த பின்னூட்டமும் நான் அனுபவித்த ஒரு மிகச்சிறிய உதாரணம்
  அசுரன்,
  //That doesn't mean I support the Claim that IT people are Fools.//
  நானும் தங்களுக்கு அப்படி பதில் எழுதவில்லையே(என்னுடைய பின்னூட்டம்)..

  //And Indeed I am requesting IT people to look at their poor future and present. //

  சரி எங்குதான் பிரகாசமான எதிகாலம் இருக்கிறது?..
  எதிர்காலம்தான் எங்கே இருக்கிறது என்று கூறுங்கள்?..
    Edit Comment
 38. Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு (Home)