மரணம்.....

[+/-] show/hide this post

மரணம் விடை சொல்ல முடியாத ஒரு கேள்வி.இதை அனுபவித்தவர்கள் சொல்லமுடியாது..
ஊயிருடன் இருபவர்கள் சொல்லுவது குருடன் யானையை விவரிப்பது போன்றது. ஊயிரின்ம் பிறக்கும் நேரத்தை கணித்து விடலாம்.ஆனால் மரணம் ஏற்படுகின்ற நேரத்தை கணிக்க முடியாது.அந்த கடவுளுக்கு கூட மரணம் உண்டு என்கிறது இந்து மதம். மரணம் உலக இயற்கையில் ஒன்று.

நேற்று காலையில் என் வீட்டில் இருந்து போன் செய்து எனது தந்தையின் சகோதரர் தவறிவிட்டதாக தகவல் சொன்னார்கள். என்னால் சென்று பார்க்க முடியவில்லை. அவரும் 50 வயதை கடந்தவர்தான். இருந்தும் அவரது மரணம் ஒரு சிறு தடுமாற்றதை ஏற்படுத்தி விட்டது. சிறு வயதில் சில கொடுரமான இறப்புகளை பார்த்து இருகிறேன். தீயில் கருகி இறந்த எதிர் வீட்டு பெண், இரயிலில் அடிபட்டு இறந்த பக்கத்து வீட்டு தோழன், இரயிலில் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பெண், லாரியின் சக்கரத்தில் தலை நசுங்கி இறந்த பள்ளிகூட நண்பன்..எத்தனையோ.இவை அனைத்தும் (இதற்கு ேமலும் சொல்லமுடியாத கொடுமையான) என் சிறு பருவத்தில் நடந்தவைகள்.

0 மறுமொழிகள்:

  1. Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு (Home)